உலகம்

10 நிமிடத்தில் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு – கட்டணம் ரூ. 1600

மனிதனின் அனைத்து பிரச்னைகளையும் 10 நிமிடத்தில் தீர்க்கும் இயந்திரம்…
சுவிட்சர்லாந்து நாட்டில் அறிமுகம்… கட்டணம் வெறும் 1600

பணப் பிரச்னை, திருமணப் பிரச்னை, கணவன் – மனைவி சண்டை, மாமியார் மருமகள் சண்டை போன்ற உலகத்தில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் 10 நிமிடத்தில் தீர்வை தரும் இயந்திரம் ஒன்று சுவிட்சர்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வெறும் 20 டாலர் அதாவது, 1600 ரூபாய் கொடுத்தால் போதும். குட்டி புல்லட் ரயில் போன்ற அழகான ஒரு வாகனம் அங்கு இருக்கும். அதில் போய் அமர்ந்து கொண்டால் போதும். 10 நிமிடத்தில் நம் உயிர் போய், உடல் மட்டுமே வெளிவரும்.

அந்த வாகனத்தில் இருந்து, நைட்ரஜன் வெளியாகி, ஆக்சிஜன் குறைந்து, 10 நிமிடத்தில் மரணம் சம்பவிக்கும்.
இப்படி ஒரு இயந்திரத்தை உருவாக்கியுள்ள நிறுவனத்தின் பெயர் assisted dying services அதாவது, செத்துப் போவதற்கு உதவும் நிறுவனம்.

இந்த இயந்திரத்தை உருவாக்கியவர் பிலிப் நிட்ச்கே. இவரை வெளிநாட்டு ஊடகங்கள் DOCTOR DEATH என அழைக்கின்றனர். காரணம் இவரது வேலையே உலகத்தில் வாழ முடியாதவர்களை மேல் உலகத்திற்கு அனுப்பி வைப்பது தான்.

இதற்காக இவர் தொடங்கிய மற்றொரு நிறுவனத்துக்கு பெயர் Exit International அதாவது, உலகத்தை விட்டே வெளியேறுவதல் என்று பெயர். இவர் பலருக்கும் பல விதமான வித்தியாசமான யோசனைகளை வழங்கி உள்ளார்.
எந்த அளவிற்கு என்றால், ஒவ்வொரு நாட்டிற்கும், உயிரை மாய்த்துக் கொள்வது தொடர்பாக ஒவ்வொரு சட்டம் உள்ளது.

இதனால், உயிரை மாய்த்துக் கொள்ள விரும்பும் அனைவரையும் ஒரே கப்பலில் ஏற்றி, சர்வதேச கடல் பகுதியில் அந்த கப்பலை மூழ்கடிக்கும் திட்டத்தைக் கூட அவர் முன்மொழிந்தார். ஆனால் இது நிறைவேறவில்லை.

இவ்வளவு விபரீதமான யோசனைகளை கூறும் இவரை எந்த ஒரு நாட்டு அரசாங்கமும் இதுவரை கைது செய்யாமல் உள்ளதற்கு காரணம், உலகில் வாழ முடியாமல் தவிப்பவர்களுக்கு மட்டுமே இவர் ஆலோசனை வழங்குகிறார்.
குறிப்பாக பல வகைப்பற்ற புற்றுநோய், உள்ளிட்ட குணப்படுத்த முடியாத, நோய்களால் பாதிக்கப்பட்டு, தினம் தினம் மரணத்தை சுவைப்பவர்களுக்கே இவர் ஆலோசனைகளை வழங்குகிறார்.

தற்போது, சுவிட்சர்லாந்தில் இவர் உருவாக்கி இருக்கும் இந்த இயந்திரம் 2019ஆம் ஆண்டே அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது, இந்த இயந்திரத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. தற்போது, மீண்டும் மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில், தனிப்பட்ட காரணங்களுக்காக தற்கொலை செய்வது குற்றம். அதே நேரம் உயிருக்கு போராடுபவர்களை கருணை கொலை செய்ய அனுமதியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு மட்டுமே இந்த இயந்திரத்தை பயன்படுத்த அனுமதிக்கப் படும் எனக் கூறப்படுகிறது.

எப்படி இருந்தாலும் கருணைக் கொலையும் ஒரு கொலை தான். மனிதன் எந்த ஒரு கஷ்டத்திலும் வாழத் தான் நினைப்பானே தவிர, இறக்க நினைக்க மாட்டான் என்கின்றனர், இந்த இயந்திரத்தை எதிர்ப்பவர்கள்.
====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button